ஊரடங்கு காலகட்டத்தில் வீட்டிலேயே சாராயம் காய்ச்சி அதிக விலைக்கு விற்பனை செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் . சேலம் மாவட்டத்தில் பெரிய புதூர் பகுதியில் வசிக்கும் சிலர் வீட்டிலேயே சாராயம் காய்ச்சி விற்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் முத்தழகன் என்ற கூலித்தொழிலாளியின் வீட்டில் சோதனை செய்தபோது அவர் சாராய ஊறல் போட்டது தெரியவந்துள்ளது. மேலும் காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் […]
