வீட்டின் மீது லாரி மோதியதில் பெண் பலத்த காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆத்தூர் பகுதியில் சுடலை மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு மாலதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சுடலைமணி வீட்டிலிருந்துவெளியே சென்றிருந்தார். இதனையடுத்து வீட்டிலிருந்த மாலதி சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக உப்பு லோடு ஏற்றிக்கொண்டு வந்த லாரி திடீரென வீட்டின் மீது பயங்கரமாக மோதியது. இதில் மாலதி பலத்த […]
