வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அண்ணாநகர் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் அப்பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்வதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு […]
