சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வீட்டின் கதவு உடைக்கப்பட்ட நிலையில் ரூ.65 ஆயிரம் பணம் திருடு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அய்யனார்புரம் பகுதியில் ஆரோக்கியதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் டெக்னிஷியனாக திருமயம் பெல் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சொந்த ஊர் கடலூர் மாவட்டம் தோமையார் நகர் பகுதியில் உள்ளது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலன்று ஓட்டு போடுவதற்காக குடும்பத்தோடு சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அதன் பின் இரண்டு தினங்களுக்கு முன்பு […]
