வீடு புகுந்து நகை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மு.வேலாயுதம்பாளையம் கிராமத்தில் நல்லசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாசிலாமணி என்ற மனைவி உள்ளார். இவர்கள் சின்னமுத்தூர் பேருந்து நிலையம் பிரிவில் பால் விற்பனை கடை வைத்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நல்லசாமி பால் கடையிலிருந்து புறப்பட்டு தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது கண்டு நல்லசாமி அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த […]
