வீடு இடிந்து விழுந்ததில் மூதாட்டி உட்பட 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சென்னம்மநாயகன்பட்டி பாலகுட்டை லயன்ஸ் காலனியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தாய் நாகம்மாள்(60) மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு வீட்டு சுவர் அருகே மழை நீர் தேங்கி நின்றது. நேற்று இரவு முருகன் உட்பட 5 பேரும் வீட்டின் பின் அறையில் தூங்கி கொண்டிருந்தனர். […]
