சென்னை மயிலாப்பூர் ஆர்.ஏ புரம் கோவிந்தசாமி நகரில் 259 வீடுகள் ஆக்கிரமிப்பில் இருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை இடிப்பதற்கு உத்தரவிட்டது. கடந்த 29ஆம் தேதி வீடுகளை இடிக்கும் பணியை அதிகாரிகள் தொடங்கினார். இதனால் அந்த பகுதியில் இருந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். அதையும் மீறி தற்போதுவரை 150க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் அந்த பகுதியில் வசித்து வரும் கண்ணையா […]
