வீடுபுகுந்து ரூ.1000-யை திருடியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கிரிஸ்டியாநகரம் பகுதியில் மோசஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு துரைசிங் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் வைத்தியலிங்கபுரம் பகுதியில் வசிக்கும் சண்முகவேல் என்பவர் துரைசிங் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த ரூ.1000-யை திருடிச் சென்றுவிட்டார். இதுகுறித்து துரைசிங் குலசேகரப்பட்டினம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சண்முகவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
