கர்நாடகத்தில் வன்முறையில் ஈடுபடுபவர்களின் வீடுகள் இடிக்கப்படுமா? என்பதற்கு முதல்வர் பசவராஜ் பொம்மை பதிலளித்துள்ளார். நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு முதல்வர் பசவராஜ் பொம்மை பேட்டியளித்தார். அப்போது வட மாநிலங்கள் பாணியில் வன்முறையில் ஈடுபடுபவர்களின் வீடுகள் புல்டோசர் மூலம் இடிக்கப்படுமா என்று நிருபர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதல்வர் பசவராஜ் பொம்மை “வன்முறையில் ஈடுபடுபவர்களை 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூருவில் காங்கிரஸ் எம்எல்ஏ சீனிவாச மூர்த்தி வீடு தீ வைத்து எரிக்கப்பட்டது. அப்போது வன்முறை […]
