குடியிருப்பு பகுதியில் புகுந்து காட்டு யானை வீடுகளை சேதப்படுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே புளியம்பாராவில் கோழிக்கொல்லி ஆதிவாசி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் திடீரென ஒரு காட்டுயானை புகுந்து வீடுகளை முற்றுகையிட்டது. இதனால் மக்கள் மிகுந்த அச்சமடைந்தனர். இந்த காட்டுயானை அப்பகுதியில் இருந்த சிலரின் வீடுகளை உடைத்து சேதப்படுத்தியது. அப்போது ஒரு வீட்டின் மேற்கூரை சரிந்து விழுந்ததால் கைக்குழந்தை உட்பட 2 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் ஆதிவாசி […]
