பிரபல மலையாள திரைப்பட இசையமைப்பாளர் கைத்தபுரம் விஸ்வநாதன் நம்பூதிரி காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த இவர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மலையாளத்தில் 1997-ல் ஜெயராஜ் இயக்கிய தேசியவிருது படமான களியாட்டம் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர், 23 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இவரது மறைவிற்கு திரையுலகை சார்ந்த பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
