விஷ வண்டு கடித்ததில் தந்தை பலியாகி மகன் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள பொட்டலூர் பகுதியில் விவசாயியான தங்க நாடார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு மாரிமுத்து என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் தங்க நாடாரும், மாரிமுத்தும் இணைந்து தங்களின் மாட்டு தொழுவத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த போது அங்குள்ள கோழிக்கொண்டை எடுத்து உள்ளனர். அப்போது அதிலிருந்த சில விஷ வண்டுகள் திடீரென பறந்து சென்று தங்க நாடாரையும், மாரிமுத்துவையும், […]
