விஷ பூச்சி கடித்து 8-ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பூமங்களப்பட்டி பகுதியில் செந்தமிழ் செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமங்கலி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு நிதிஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அதே பள்ளியில் நிதிஷின் சகோதரியான அபியா என்பவர் படித்து வருகிறாள். கடந்த 22-ஆம் தேதி பள்ளி வளாகத்தில் இருந்த தார்ப்பாய் அப்புறப்படுத்தப்பட்டது. […]
