300 வருட பழமையான விஷ்ணு கோவில் ஒன்று பாகிஸ்தானில் தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் இத்தாலிய தொல்லியல் ஆய்வாளர்கள் சேர்ந்து பாகிஸ்தான் கைபர் பக்துன்கவா மாகாணம், ஸ்வாத் மாவட்டத்திலுள்ள பாரிகோட் குண்டாய் மலைப்பகுதியில் அகழ்வாய்வில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விஷ்ணு கோவில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக தொல்லியல் ஆய்வாளரான பசல் காலிக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்த விஷ்ணு கோவிலானது சாஹி அரச வம்ச காலத்தில் அதாவது சுமார் 300 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டிருக்க வேண்டும். ஸ்வாத் […]
