உருளை கீழே விழுந்து மஞ்சள் நிற விஷவாயு கசிந்ததால் 10 பேர் உயிரிழந்துள்ளனர். ஜோர்டான் நாட்டில் அகுவாபா என்ற துறைமுகம் அமைந்துள்ளது. இந்த துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பல் ஒன்றில் கிரேன் உதவியுடன் பெரிய அளவிலான உருளை ஒன்று இறக்கப்பட்டுள்ளது. இந்த உருளை திடீரென கிரேனிலிருந்து நழுவி கப்பலில் விழுந்தது. இந்த உருளை விழுந்ததில் மஞ்சள் நிற விஷவாயு பெருமளவில் பரவி அந்த பகுதியை சுற்றிலும் சூழ்ந்ததுள்ளது. இதனை தொடர்ந்து, இந்த பகுதியிலிருந்த துறைமுக பணியாளர்கள் தப்பியோடினர். […]
