திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்ற நிலையில் விவசாயிகள் கர்நாடக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பியதால் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. அந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் காயத்ரி தலைமை தங்கிய நிலையில் வேளாண்மை இணை இயக்குனர் சிவகுமார், வருவாய் அலுவலர் சிதம்பரம், வெண்ணாறு வடிநிலை கொட்ட செயற்பொறியாளர் முருகவேல், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஹேமாஹெப்சிபாநிர்மலா மற்றும் அரசு நிர்வாகிகள் பலரும் […]
