மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 234 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாரஷ்டிராவில் இருந்து தமிழகம் வந்த 46 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யபட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,224-ல் இருந்து 11,760 ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 304 பேர் ஆண்கள் மற்றும் 232 பேர் பெண்கள் ஆவர். சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 364 பேருக்கு […]
