யானை தாக்கியதில் விவசாயி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள துருசனாம்பாளையம் கிராமத்தில் விவசாயி தொட்ட மாதையன் வசித்து வந்தார். இவருடைய விவசாய தோட்டம் தட்டக்கரை வனப்பகுதியை ஒட்டி இருக்கிறது. இங்கு தொட்ட மாதையன் 4 ஏக்கர் பரப்பளவில் கேழ்வரகு, மக்காச்சோளம் போன்றவை சாகுபடி செய்துள்ளார். இந்த தோட்டத்திற்குள் வனப்பகுதியிலிருந்து வெளியேறும் யானைகள் நுழைந்து பயிரை சேதப்படுத்தி வந்தது. இதனால் பயிரை பாதுகாக்க தொட்ட மாதையன் தோட்டத்தில் பரண் அமைத்து அங்கேயே இருந்து […]
