மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாய சங்க செயலாளர் தீக்குளிக்க முயன்ற சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டனம்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் ஞானசேகரன். இவர் விவசாய சங்க செயலாளராக இருக்கிறார். இவர் நேற்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினரை தடுத்து நிறுத்தினர். அதன் பிறகு காவல்துறையினர் ஞானசேகரனிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் ஞானசேகரன் […]
