தேனி மாவட்டத்தில் உள்ள பெரிய குளம் அருகே சொர்க்கம் கோம்பை வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் தேனி எம்.பி ரவீந்திரநாத்துக்கு சொந்தமான தோட்டம் ஒன்று அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் வனத்துறையினரால் அமைக்கப்பட்ட சோலார் மின் வேலியல் திடீரென சிறுத்தை ஒன்று சிக்கியுள்ளது. இதைப்பார்த்த கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் சிறுத்தையை மீட்பதற்காக போராடினர். ஆனால் சிறுத்தை தானாகவே சோலார் மின்வேலியை விட்டு […]
