தண்ணீரில் மூழ்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் விவசாயியான கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வயலுக்கு சென்ற கணேசன் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அவரது உறவினர்கள் கணேசனைபல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். அப்போது ஏரிக்கு அருகில் கணேசனின் காலனி கிடந்துள்ளது. இதுகுறித்து அவரது உறவினர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் […]
