கல்லால் அடித்து விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பாசமுத்திரம் பகுதியில் பேச்சி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு துரைபாண்டி என்ற மகன் இருந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் துரைபாண்டிக்கும் அதே பகுதியில் வசிக்கும் அவரது உறவினரான சிவசங்கர பெருமாள் என்பவரின் குடும்பத்தினருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற கோவில் கொடை விழாவில் இரு குடும்பத்தினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் துரைப்பாண்டி அப்பகுதியிலுள்ள […]
