செல்போன் கோபுரம் அமைத்து தருவதாக கூறி விவசாயிடம் இருந்து நூதன முறையில் பணமோசடி செய்த மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏப்பாக்கம் கிராமத்தில் முத்துபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முத்து பாலகிருஷ்ணனின் செல்போனிற்கு மர்மநபர் ஒருவர் போன் செய்து தனியார் நிறுவனம் ஒன்றில் இருந்து பேசுவதாக கூறியுள்ளார். இதனையடுத்து அவருடைய நிலத்தில் செல்போன் கோபுரம் அமைக்க உள்ளதாகவும், அதற்கு ரூ.30 லட்ச ரூபாய் முன்பணமாகவும், மாதத் தவணையாக தருவதாகவும் […]
