திருவள்ளூர் அடுத்த மணவாளன் நகர் பகுதியில் விவசாயிகள் மற்றும் நெசவாளர்கள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசிய போது, தமிழகத்தில் அம்மாவுடைய அரசு பல்வேறு வகையிலே விவசாயிகள் உதவி செய்த காரணத்தால் இன்றைக்கு தொடர்ந்து உணவு தானிய உற்பத்திலே அதிக விளைச்சலை கொடுத்து, கிஸ்கருமான் விருதை தொடர்ந்து நம்முடைய மாநிலம் பெற்று கொண்டு இருக்கிறது. தமிழகம் முழுவதும் பத்து மாவட்டங்களிளே வேளாண் பெருமக்கள் உற்பத்தி செய்கின்ற காய்கறி, பழங்கள் எல்லாம் சரியான […]
