டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் டிராக்டர் பேரணியில் போலீஸ் கண்ணீர் புகை குண்டு வீசி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி – ஹரியானா எல்லைப்பகுதியான கர்னல் மற்றும் டெல்லி – உத்தரப்பிரதேசம் எல்லைப்பகுதியான காசிப்பூர் ஆகிய பகுதிகளிலிருந்து எல்லைகளைத் தாண்டி, தடுப்புகளை தாண்டி தற்போது விவசாயிகள் போராட்டமானது டெல்லிக்குள் நுழைந்திருக்கிறது. இந்த போராட்டமானது மிகவும் கடுமையான கட்டத்தை எட்டி இருக்கிறது. கண்ணீர் புகை குண்டுகளை வீசி விவசாயிகளை கலைக்க டெல்லி காவல்துறை அதிகாரிகள் முற்பட்டாலும், அதனை மீறி […]
