டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் நடந்த கலவரத்தில் விவசாயி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் டெல்லியில் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகளின் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குடியரசு தின விழா அன்று பேரணி முடிந்த பின்பு விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் விவசாயிகள் அதற்கு முன்பாகவே டிராக்டர்களை கொண்டு வந்து டெல்லியினுள் நுழைந்துள்ளனர். இதனால் காவல்துறையினர் விவசாயிகளை வெளியேற்றும் நோக்கில் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதோடு துப்பாக்கிசூடு நடத்தினர். […]
