26,275 விவசாயிகள் பயன்பெறும் வகையில் பயிர்கடன்களை தள்ளுபடி செய்துள்ளதாக விருதுநகர் மாவட்ட ஆட்சியாளர் தகவல் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியாளர் கண்ணன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியாளர் கண்ணன் விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கும்படி சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளார். பின்னர் தொடர்ந்து கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியாளர் தமிழகஅரசு அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் 26,275 விவசாயிகள் பயன்பெறும் வகையில் […]
