விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்ட அதற்கான விலையில்லா உரங்களை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின் பெயரில் திருவோணம் வட்டார விவசாயிகள் அனைவருக்கும் கடந்த சில நாட்களாக விலையில்லா உரங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால் இடையங்காடு, திப்பன்விடுதி உள்ளிட்ட பகுதியில் வசிக்கும் விவசாயிகளுக்கு விலையில்லா உரங்களை வழங்க பாரபட்சம் காட்டப்படுவதால் திருவோணம் வட்டார விரிவாக்க வேளாண்மை […]
