கர்நாடகாவில் பாரத் பந்த்துக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 9 மாதங்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முழு அடைப்பு போராட்டத்திற்கு விவசாய சங்கத்தினர் அழைப்பு விடுத்திருந்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவிலும் அனந்தராவ் சர்க்கிளில் நேற்று காலை கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் குருபூர் சாந்தகுமார் தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அவர்கள் ஊர்வலமாக செல்ல முயன்ற போது, காவல்துறையினர் […]
