சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் கார் மேகம் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) பாலய்யா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் செல்வமணி போன்றோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பலர் பங்கேற்று பல பிரச்சினைகளை பற்றியும், அதற்கு தீர்வு காண்பது குறித்தும் பேசினர். இக்கூட்டத்தில் விவசாயிகள் பேசியிருப்பதாவது “ஆத்தூர் தலைவாசல், கெங்கவல்லி உள்ளிட்ட […]
