டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக ,நேற்று நாடு முழுவதும் ‘பாரத் பந்த்’ போராட்டம் நடைபெற்றது. மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லியில் விவசாயிகள் கடந்த 3 மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த போராட்டமானது 100 நாட்களுக்கு மேல் கடந்து, 120வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. இது சம்பந்தமாக மத்திய அரசுடன் நடந்த 11 கட்ட பேச்சுவார்த்தையில் ,உடன்பாடு எட்டப்படாததால் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். […]
