ஏர் கலப்பையுடன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியனில் நிலையூர் கண்மாய் அமைந்துள்ளது. வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் சமயத்தில் இந்த கால்வாய் வழியாக ஆலங்குளம், கருவேலம்பட்டி, சூரக்குளம் உட்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாசன வசதி பெறும். தற்போது கனமழை பெய்தும் இந்த கண்மாயில் 60 சதவீதம் மட்டுமே தண்ணீர் இருக்கிறது. இதனால் வைகை அணையிலிருந்து தண்ணீரை திறக்க வேண்டும் மற்றும் நீர்ப்பிடிப்பு […]
