விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செஞ்சி அருகில் துவரையை இயற்கை முறையில் பயிரிட்டு அதிகமான லாபம் ஈட்டி பட்டதாரி இளைஞர் ஒருவர் அசத்தி வருகிறார். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செஞ்சி அடுத்துள்ள மேல்பாப்பம்பாடி கிராமத்தில் அருண்பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பி.இ மெக்கானிக்கல் பட்டதாரி ஆவார். இவர் தனது பட்டப்படிப்பை முடித்ததும் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். இதையடுத்து அந்த வேலையை உதறிதள்ளிவிட்டு சொந்த ஊருக்கு திரும்பிய அருண்பாண்டியன் விவசாயம் செய்யத் தொடங்கினார். அதன்படி தனக்கு சொந்தமான […]
