விவசாயம் செய்ய அனுமதியளிக்க வேண்டும் என மலைகிராம மக்கள் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள வனப் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து வனத்துறையினர் பாதுகாத்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் அரசடி, இந்திராநகர், பொம்மராஜபுரம் போன்ற மலை கிராமங்களும் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் வசிக்கும் பொது மக்களை வெளியேற உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்துள்ளது. அதன் அடிப்படையில் மலைகிராம மக்களை வெளியேற்றுவதற்கு […]
