தமிழகத்தில் விவசாயத்திற்காக துறை எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், தமிழகத்தில் பயிர் சாகுபடிக்கு தேவையான விதைகள், ரசாயன உரங்களை மாநிலத்தில் அனைத்து பகுதிகளிலும் போதுமான அளவு இருப்பு வைத்து விவசாயிகளுக்கு காலத்தே விநியோகம் செய்ய வேண்டும் என்று தமிழகம் முதல்வர் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். பயிர் சாகுபடிக்கு சாதகமான சூழ்நிலை கடந்த ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாத வரை தென்மேற்கு பருவகாலத்தில் […]
