புதுக்கோட்டை மாவட்டத்தில் உலக பூமி தினத்தை முன்னிட்டு விவசாயிகள் நல் ஏர் பூட்டி சாமியை வழிபட்டு உழவுப் பணியை தொடங்கியுள்ளனர். சித்திரை முதல் நாளன்று விவசாயம் செழிக்க நல் ஏர் பூட்டி விவசாயிகள் உழவுப் பணியை தொடங்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தொண்டைமான்ஊரணி கிராமத்திலுள்ள விவசாயிகள் உலக பூமி தினத்தை கொண்டாடும் வகையில் நல் ஏர் பூட்டி வழிபட்டுள்ளனர். இதனையடுத்து காளை பூட்டி உழும் ஏர் கலப்பை இல்லாததால் ஏந்திர கலப்பையான டிராக்டர் கொண்டு […]
