திண்டிவனத்தில் தலைமை காவல் அதிகாரி மது போதையில் காரைஒட்டியதில் அதில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த பெரமண்டூர் பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ். இவர் கோபாலபுரத்தில் உள்ள தனது வயல் வெளியை பார்வை பார்த்துவிட்டு புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை வழியாக வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றிருக்கிறார். அப்பொழுது புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி வந்த போலீஸ் கார் ஒன்று தர்மராஜ் இருசக்கர வாகனத்தின் மீது பின்புறமாக மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் தர்மராஜ் […]
