தமிழக தலைமைச் செயலாளர் வே. இறையன்பு 44 வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி தொடர்பான பல்வேறு முன்னேற்பாடு பணிகள் பற்றி தமிழ்நாடு அரசு அமைத்துள்ள செயற்குழுக்களின் உயர் அலுவலர்களுடன் நேரில் சென்று இன்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். 44வது செஸ் ஒலிம்பியாட் 2002 போட்டிகள் மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் முன்னேற்பாடு பணிகளை தமிழக தலைமை செயலாளர் இறையன்பு நேரில் இன்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். […]
