திருக்கோவிலூர் அருகே சர்வதேச குழந்தைகள் உரிமை தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே இருக்கும் ஜி.அரியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச குழந்தைகள் உரிமை தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும் ஒன்றிய குழு உறுப்பினருமான ராஜேந்திரன் தலைமை தாங்கி பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதன்பின் சிறப்புரை ஆற்றினார். இந்த பேரணியில் பள்ளி தலைமை ஆசிரியை, கல்வி மேலாண்மை குழு தலைவர், […]
