மருந்துகளை தவறான முறையில் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் மருந்து விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மருந்து வணிகர்கள் சங்க தலைவர் குமார் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் ஹபீப் முகமது கலந்து கொண்டார். இவர் கூட்டத்தில் கலந்து கொண்டவர் களிடம் மருந்து விற்பனையாளர்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என்று கூறினார். […]
