மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊட்டச் சத்து மிக்க சிறு தானியங்களை விவசாயிகள் அதிகப்படியான சாகுபடி செய்வதற்காக விழிப்புணர்வு வாகனங்களை கலெக்டர் சமீரன் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். கோவை மாவட்டம், கலெக்டர் அலுவலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்களின் சாகுபடியை ஊக்குவிப்பதற்காக 6 விழிப்புணர்வு வாகனங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்துள்ளது. மேலும் அந்த வாகனங்களை மாவட்ட ஆட்சியர் சமீரன் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது , […]
