வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது விவசாயிகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். இதைத் தொடர்ந்து பல அரசியல் தலைவர்களும் இதனை வரவேற்று வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன. விவசாயிகள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “மோடி அரசு மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் […]
