ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து அதிகமான பக்தர்கள் வருகை புரிவார்கள். இந்தியாவிலேயே அதிகம் நன்கொடை பெறும் கோவிலாக திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளது. இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி ஆண்டாள் திருவாடிபூர சாத்துமுறை, புரசைவாரி தோட்டத்துக்கு உற்சவர் மலையப்பசாமி எழுந்தருள்கிறார். 2-ந்தேதி கருடபஞ்சமியையொட்டி கருடசேவை, 6-ந்தேதி தரிகொண்டா வெங்கமாம்பா பிறந்த நாள், 8-ந்தேதியில் […]
