கோவை மாவட்டம் ஆனைமலை தாலுகாவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இருக்கிறது. இங்கு சுமார் 1200 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்நிலையில் பள்ளியில் காலை, மாலை என 2 வேளையும் மைதானத்தில் விளையாட்டு வீரர்கள் பயிற்சிசெய்தும், முதியோர்கள் நடைபயிற்சி மேற்கொண்டும் வருகின்றனர். இதற்கிடையில் பள்ளி மைதானத்தில் ஒருபகுதியில் தாலுகா அலுவலகம் கட்டப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மைதானத்தின் பரப்பளவு குறுகியிருக்கிறது. தாலுகாவுக்கு வரக்கூடிய வாகனங்கள் அனைத்தும் பள்ளி மைதானத்திலேயே நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள், விளையாட்டுவீரர்கள் […]
