தேனி மாவட்டத்தில் மரத்தில் ஊஞ்சல் கட்டி விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் எதிர்பாராதவிதமாக கயிறு கழுத்தில் இறுக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி பகுதியில் உள்ள முத்துசங்கிலிபட்டியில் திரவியராஜா என்பவர் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவரது வீட்டிற்கு அருகில் உள்ள மரத்தில் திரவியராஜாவின் மூத்த மகன் கவியரசன்(10) கயிற்றால் கட்டப்பட்ட ஊஞ்சலில் விளையாடி கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஊஞ்சலில் கயிறு சிறுவனின் கழுத்தில் சுற்றி கீழே விழுந்துள்ளார். […]
