கன்னியாகுமரி அருகே தந்தை ரீசார்ஜ் செய்யாத மன விரக்தியில் கல்லூரி மாணவர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தளவாய்புரம் கிராமத்தில் வசித்து வருபவர் ஆண்டனி டேனியல். கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மகன் ஆண்டோ பெர்லின் நாகர்கோவிலில் உள்ள தனியார் பாலிடெக்னிக் ஒன்றில் படித்து வந்துள்ளார். ஊரடங்கின் காரணமாக வீட்டில் இருக்கும் பெர்லின் எப்போதும் செல்போனில் வீடியோ கேம் விளையாடுவது வழக்கம். அதேபோல் வீடியோ கேம் […]
