விளக்கு ஏற்றிய போது எதிர்பாராதவிதமாக தீ விபத்து நேர்ந்ததால் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெள்ளையாபுரம் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராசாத்தி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ராசாத்திக்கும் ஆலாவூரணி பகுதியில் வசிக்கும் மணிகண்டன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மணிகண்டன் ராசாத்தியின் நகையை அடகுவைத்து வீட்டிற்கு ஒத்தி பணம் கொடுத்துள்ளார். அதன் பிறகு இந்த தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு […]
