தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக ஒரு கோடி சப்ஸ்கிரைபர்களை பெற்ற யூடியூப் சேனல் என்ற பெருமையை வில்லேஜ் குக்கிங் சேனல் பெற்றுள்ளது. கிராமத்து மண்வாசம் நிறைந்து சமைக்கும் இவர்கள் புதுக்கோட்டை கீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஆவார்கள். இவர்கள் முதல்முறையாக அக்டோபர் மாதம் ஒன்பதாம் தேதி 2018 ஆம் ஆண்டு தங்களது யூடியூப் சேனலை தொடங்கினார்கள். சேனல் தொடங்கும்போது இவர்கள் கூறியதாவது ஆறுமாதம் விவசாயம் செய்யும் நாங்கள், மீதமுள்ள ஆறு மாதத்தில் ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணி யூடியூப் […]
