புதுச்சேரியில் சக்கரபாணி ஆற்றில் சரமாரியாக வெட்டப்பட்ட நிலையில் உயிருக்கு போராடி கொண்டு இருந்த கிளீனரை காவல் துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். வில்லியனூர் சக்கரபாணி ஆற்றில் கிளீனர் வெட்டப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது ஐய்யங்குட்டி பாளையம் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்பதும், காரைக்காலில் கார்த்திக் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய சாட்சி என்பது […]
