நாடு முழுவதும் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதால் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் அதிகரித்து வருகிறது. கொரோனா காலகட்டத்திற்கு பிறகு சிலிண்டர்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் மத்திய அரசு வழங்கும் சிலிண்டருக்கான மானியமும் சில மாதங்களாக வழங்கப்படாமல் இருந்தது. ஆனால் சமீப காலமாக மீண்டும் சிலிண்டர்களுக்கான மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிலிண்டர் ஒன்றின் விலை 1100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதனால் ஏழை எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் ராஜஸ்தான் […]
